ராமராக பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.
A new journey begins.. ❤️
One of my most special ones.. overwhelmed to be a part of #Adipurush #Prabhas #SaifAliKhan @mesunnysingh @omraut #BhushanKumar @vfxwaala @rajeshnair06 @TSeries @retrophiles1 #TSeries pic.twitter.com/198BqAuoXT— SIFRA (@kritisanon) March 12, 2021
ராமாயண கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும் நடிகர் சயிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி சனோன் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.