Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மனுஷன் திம்பானா ? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… ரேஷன் கடை முன்பு வெகுண்டெழுந்த பொதுமக்கள்…!!

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசி மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இதில் காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். அப்போது அங்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாக இருந்துள்ளது. இதனால் கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் நூறு கிலோ ரேஷன் அரிசியை தரையில் கொட்டி அதை சுற்றிலும் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் தரமான அரிசியை வழங்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, தாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் எனவும், இந்த அரிசியை தான் சமைத்து சாப்பிடுவதாகவும், சாப்பிடும் போது கெட்ட வாடை வருவதாகவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. பின்னர் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |