Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தரிசனத்திற்கு புறப்பட்ட கும்பல்…. இடையில் நேர்ந்த இடையூறு…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் வேன் கவிழ்ந்து அதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் உள்ள களிமங்குண்டு எனுமிடத்தில் இருந்து 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு சென்று முருகனை தரிசிக்க கிளம்பினர். பிள்ளையார் பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு செல்ல நினைத்திருந்தனர். இதனால் அவர்கள் பிள்ளையார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஜமீன்தார்பட்டி அருகே கண்மாய் வளைவு என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியதால் வேன் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 9 பேர் காயமடைந்தனர். களிமங்குண்டு என்னும் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி ஆறுமுகம் என்ற வயதான மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 9 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை குறித்து திருக்கோஷ்டியூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |