Categories
அரசியல்

ஒரே நாளில் என் கோரிக்கை நிறைவேறியது… தமிழ்நாடு அரசு இதை செய்யணும்… ராமதாஸ் வலிறுத்தல்…!!!

அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களும் மீண்டும் வேலைக்கு வருமாறு சுகாதாரத்துறை அழைத்திருப்பதை இராமதாஸ் வரவேற்றிருக்கிறார்.

பா.ம.க வின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் இது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்களையும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களையும் மீண்டும் வேலைக்கு சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கக்கூடியது.

அவர்களது வாழ்வாதாரத்திற்கு இது பாதுகாப்பாக இருக்கும். திடீரென்று மருத்துவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் போராடி வருவதை குறிப்பிட்டு அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று நேற்று வலியுறுத்தினேன். ஒரு நாளில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

மருத்துவர்களுக்கு தற்போது கிடைத்த இந்த தீர்வு தற்காலிகமானதாக இருக்க வேண்டாம். அம்மா கிளினிக் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு நிலையான பணியை அளிக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |