ஜப்பானில் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்து கொண்ட இளவரசி மகோவை கண்டித்து பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.
ஜப்பானில் சுமார் நூற்றுக்கணக்கானோர் மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை இளவரசி மகோ திருமணம் செய்து கொண்டதை கண்டித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தனது கல்லூரி பருவ காதலனான கெய் கொமுரோவை இளவரசி மகோ காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் ஏற்கனவே கெய் கொமுரோவின் தாயார் கடந்த 2017-ஆம் ஆண்டில் நிச்சயதார்த்தம் நடந்த போது மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியதால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் மோசடி புகாரில் சிக்கியவர்களுடன் அரச குடும்பம் சம்பந்தம் வைத்திருப்பதை கண்டித்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்து இளவரசி மகோ தனது கணவருடன் சென்று வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.