இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து உள்ளது. அதாவது செல்சியா ஸ்டார் என்ற நிறுவனம் பல்சர் ப்யூஷன் என்ற கலப்பின ராக்கெட் என்ஜினை அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் மூலம் சோதனை செய்தது.
இதில் HDPE எனப்படும் பாலி எத்திலின் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளில் காணப்படுகிறது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்து சக்திவாய்ந்த மற்றும் நச்சுத்தன்மையற்ற ராக்கெட் எரிபொருளை தயாரிக்க முடியும் என செல்சியா ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறையை பயன்படுத்தினால் செவ்வாய் கிரகத்திற்கு போகும் நாட்கள் விரைவாக குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.