Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்சிங்..!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்  

மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் , 09 பேர்  தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாக்கா ஒதுக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர்.

Image

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜ்நாத் சிங் இன்று தேசிய போர் நினைவு சின்னத்துக்கு சென்று அங்கு உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தனது அமைச்சகத்திற்கு வந்து ராஜ்நாத்சிங் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து பாதுகாப்பு துணை இணை அமைச்சராக  ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்கும் பொறுப்பேற்று கொண்டார். இதேபோல மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் பொறுப்பேற்று கொண்டார்.

 

Categories

Tech |