Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு… 7 பேர் விடுதலை… நாளை தீர்ப்பு..!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரும் விடுதலை செய்யப்படுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வர உள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் அனுமதிக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |