ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி.
இந்த சந்திப்பில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இல்லை.எல்லாரும் ஒரே நாட்டின் மக்கள் ஒரே தொப்புள் கொடி உறவுகள் நமக்குள் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. பொருளாதாரத்தில் பாரதநாடு சிறப்பாக வரவேண்டும் என்பது தான் நடிகர் ரஜினியின் எண்ணம் என்று அவர் தெரிவித்தார்.