Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட ஏராளமான சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை வலியுறுத்தினர்.

இந்த சூழ்நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்தும் அதிமுக அரசு மேல்முறையீடு செய்வதை எதிர்த்து கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்தார். அதில் டாஸ்மார்க் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று கடுமையாக பதிவிட்டு ரஜினி அதிமுக கண்டித்திருந்தார். ஒவ்வொரு முறையும் அதிமுகவுக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வந்த ரஜினியின் இந்த கருத்து பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஒட்டுமொத்தமாக அனைவரும் அதிமுக அரசை கண்டித்த போதும் கூட நடிகர் ரஜினிகாந்தின் கருத்து முரண்பட்டதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ரஜினியின் கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது.அந்தவகையில் ரஜினியின் கருத்து குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிகுமார் கூறுகையில், டாஸ்மார்க் மதுக் கடையை திறக்க அனுமதி கொடுத்த மத்திய அரசை ரஜினிகாந்த் கண்டிப்பாரா? அவர் எச்சரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக ரஜினியை திருப்பி விட்டுள்ளார்.

இது ஆளும் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரும்போது கொண்டு வந்த மத்திய அரசை மு க ஸ்டாலின் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அதிமுக அரசும் ஆமா சாமி போடுவதை விட்டுவிட்டு மத்திய அரசை கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக கண்டனத்தை தெரிவித்தார். அதே வழியில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக ரஜினியை பேசவேண்டும் கண்டிக்க வேண்டும் என்று விசிக நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளது.

Categories

Tech |