Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பதவி…. சிஸ்டத்தை மாற்றிய ரஜினி…. ஆடிப்போன நிர்வாகிகள்… !!

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக அரசியலில் சூறாவளி வீசியது.

அரசியல் அறிவிப்பு : 

இதை தொடர்ந்து நாம் வேடிக்கை பார்ப்பது நியாயமாக இருக்காது. தமிழக மக்களுக்கு ஒரு நல்லதை செய்யவேண்டுமென்றால் அரசியல் இறங்குவதுதான் சரி என்று முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி , போர் வரும் போது வாருங்கள் , போருக்கு தயார் என்று சொன்னார். இதனை தொடர்ந்து ஆன்மீக அரசியல் என்றெல்ல்லாம் கூறிய ரஜினின் வருகைக்காக தமிழக அரசியல் களம் காத்துக் கொண்டு இருந்தது.

நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசுவார் ? எப்போது அரசியல் கட்சி அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில் அவர் தெரிவித்த ஒவ்வொரு கருத்தும் தமிழக அரசியலில் பேசு பொருளாகியது. 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று தெரிவித்த ரஜினி இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

நிர்வாகிகள் கூட்டடம் : 

அரசியல் அறிவிப்பை அறிவித்த பின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை 3ஆவது முறையாக இன்று சந்தித்த ரஜினி 1.30 மணி நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கட்சி அறிவிப்பு , மன்ற உறுப்பினர் பதிவு குறித்த விவரம் என அரசியல் அறிவிப்புக்கு பின் நடந்த பணிகளை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்த போது , எனக்கு திருப்தியில்லை , ஏமாற்றமே என்று தெரிவித்தார்.

என்ன ஆலோசனை : 

ரஜினி பேசிய இந்த கருத்துக்கு ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மேற்கொண்ட ஆலோசனை ஏற்பட்ட நிகழ்வுகள் தான் காரணம். அப்படி என்ன நடந்தது என்று பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை கூறினாலும் , அங்கு நடந்த சில உண்மையான நிகழ்வுகள் காற்றில் கசிந்துள்ளது. அதாவது ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரி இல்லை என்று கூறி இருந்தார். அப்படி அவர் தெரிவித்த சிஸ்டம் இங்கு இருக்கு அரசியல் கட்சிகளை போல பதவிக்கு வழிவகுக்கும் முறை நம் கட்சியில் இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

என்ன பேசினார் ரஜினி : 

இன்றைய ஆலோசனையில் நடிகர் ரஜினி , மாவட்ட செயலாளர்களிடம் 3 விஷயங்களை பேசியுள்ளார். அதில் 2 சம்ம்மதம் தெரிவித்த நிர்வாகிகள் 1 மறுப்பு தெரிவித்துள்ளனர். அது தான் ரஜினியின் ஏமாற்றத்துக்கு காரணமாக சொல்லப்படுகின்றது. திமுக , அதிமுக , மற்ற கட்சிகளை போல இங்கு பொறுப்புகள் இருக்க கூடாது. மாணவர் அணி , இளைஞர் அணி என்றெல்லாம் பொறுப்புகள் இருந்தால் அது ஊழலுக்கு வழிவகுக்கும். தேர்தல் நடைபெறும் வரை தான் நிர்வாகிகளுக்கு பொறுப்பு. தேர்தல் முடிந்தால் பொறுப்புகள் கலைக்கப்பட்டு. முக்கிய ஒரு சில பொறுப்புகள் இருக்கும் இதுதான் ரஜினி மாற்றியுள்ள சிஸ்டம்.

சிஸ்டத்தை சரி செய்த ரஜினி : 

இரண்டாவது ரஜினி மன்ற நிர்வாகிகளோடு பேசியது , தேர்தல் சமயத்தில் எனக்கு சீட் வேண்டும் , என் சொந்தக்காரருக்கு சீட் வேண்டும் என்று யாரும் சொல்ல கூடாது. தேர்தலில் இளைஞர்களுக்கு 60 % வாய்ப்பும்  , 40 % அனுபவசாலிகள் , கூட்டணி கட்சியினர் , ஓய்வு பெற்ற IAS , IPS அதிகாரிகள் என்று தேர்தல் சீட் ஒதுக்க வேண்டும். எனக்கு நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு சீட் கிடைக்கலாம் , கிடைக்காமல் போகலாம் என்று தெரிவித்தார். இப்படி ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் வாராது என்பதை ரஜினி நம்புகின்றார்.

முதல்வர் பதவி :

ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் மேலே பேசிய அனைத்தையும் ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள் முதல்வர் பதவி குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது முதலமைச்சராக ரஜினி இருக்க மாட்டார். வெற்றி பெற்றதில் ஒருவர் முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்வார். தாம் கட்சியை வழிநடத்துவதாக தெரிவித்தார். ஆட்சி மக்களுக்கானது , கட்சி நபர்களுக்கானது. கட்சி வேறு ஆட்சி வேறு இதுதான் மக்களுக்கு நல்ல திட்டங்கள் சென்றடைய வழிவகுக்கும் என்று ரஜினி தெரிவித்தார்.

ரஜினியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக மறுத்தனர். அதற்க்கு முதலில் மக்களிடம் போய் சொல்லுங்கள் , பதவி சுகத்துக்கு ஆசை படாதவன் தான் இந்த ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். இதில் மன்ற நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் தான் தான் ஏமாந்து விட்டதாக ரஜினி தெரிவித்தார்.

rajini seemanக்கான பட முடிவுகள்

ரஜினி நம்புவது : 

 

ரஜினி எடுத்த முடிவை அவர் முழு வெற்றிக்கான ஒரு முடிவாக பார்க்கின்றார். குறிப்பாக சீமான் , இயக்குனர் பாரதிராஜா போன்றவர்களெல்லாம் ரஜினி தமிழகத்தை ஆளக்கூடாது என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி எடுத்த முடிவு இப்படியாக கூட இருக்கலாம். அதே வேளையில் கட்சி தொடங்கி , வெற்றி பெற்று முதலைவராக ஆகாமல் இருக்கின்றார் என்றாலே இது ஒரு மாற்றப்பட்ட சிஸ்டம் தான். பதவி ஆசை இல்லாத ஒருவரால் மட்டும் தான் இப்படி அறிவிக்க முடியும் இதுவே ரஜினிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Categories

Tech |