நாளைய ஊரடங்குக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை நடைபெறும் ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் , கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜ்-ஜில் இருக்கிறது. இது மூன்றாவது இடம் போய்விடக்கூடாது. மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 16 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே நாம் மூன்றவது ஸ்டேஜ் போகவிடாமல் தடுத்து விடலாம். எனவேதான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவை கொடுத்துள்ளார். அதனை நாம் பின்பற்றி பிரதமர் சொன்ன மாதிரி 22ஆம் தேதி 5 மணிக்கு கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவர்களை பாராட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/rajinikanth/status/1241311934445522951