நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மணி நேரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகின்றார். கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , மாநாடு போன்ற பல்வேறு கருத்துக்களை அவர் கேட்டு வருகிறார். அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு என்னென்ன செய்யலாம் ? எந்த ஊரில் நடத்தலாம் ? என்பது குறித்தும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை பூத் கமிட்டியில் திமுக , அதிமுக ரொம்ப ஸ்ட்ராங் எனவே நாமும் பூத் கமிட்டிக்கு 10 பேரை நியமிக்க வேண்டும். அதற்கான 90% சதம் பணிகளை முடித்து விட்டோம் என்ற மாவட்ட செயலாளர்களும் தங்களின் கருத்தை பகிர்ந்துள்ளார்கள். கடந்த 1 மணி நேரத்துக்கும் மேலாக ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு அடைந்தது.
இதன் மூலமாக நமக்கு தெரியவருவது என்னவென்றால் ரஜினி அரசியல் பிரவேசத்தை தொடங்குவதற்கான ஒரு ஆயத்த பணியில் இருப்பதாக தெரிகிறது. வரக்கூடிய ஜூன் மாதத்திற்கு பிறகு அவர் முழு வீச்சில் முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அவர் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம்ஆகியுள்ளார். அண்ணாத்த என்ற படமும் , கமலஹாசன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படமும் நடிக்க இருக்கின்றார்.