சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்துள்ள ட்விட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் சித்தரவதை மரணம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் சம்மந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகனேஷ் சிபிசிஐடி போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டுகின்றது. அதே போல மற்றொரு எஸ்.ஐயை சிபிசிஐடி போலீசார் தேடி சென்ற போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரின் செல் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து பல திருப்பங்களை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கண்டன அறிக்கையை வெளியிட்டார். அதில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியீட்டு ட்விட் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் சத்தியமாக தப்பித்து விட கூடாது என்று கண்டனம் தெரிவித்து ட்விட் செய்திருந்தார். இதை தனது ட்விட்க்கு பரிமாறிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசை எழுப்பும் முயற்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இணைந்துள்ளார். அதில் தன்னையும் இணைத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி என்று பதிவிட்டார். இந்த சம்பவத்தில் திமுக அரசியல் செய்துவருவதாக அடுத்தடுத்து சொல்லப்பட்ட நிலையில் அரசுக்கு எதிராக நடிகர் ரஜினியை திருப்பி விடுவது போன்ற பிம்பத்தை உதயநிதி ஸ்டாலின் உருவாக்கி கொண்டார். இது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.