Categories
அரசியல் மாநில செய்திகள்

தீய சக்தியை அடையாளம் காட்டிய ரஜினி..! தொடர்ந்து பேசுங்க சூப்பர் ஸ்டார்.. அர்ஜுன் சம்பத் புது வேண்டுகோள் …!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஆன்மீகவாதி, தேசியவாதி, ஆன்மீக அரசியலை முன்னிறுத்தியவர். அதே நேரம் ஒரு அரசியல் கட்சி துவக்கும் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கி இருக்கிறார். மற்றபடி அவருடைய ஆன்மீக அரசியல் கொள்கைகளில் இருந்தோ அல்லது தேசிய அரசியல் கொள்கைகளில் இருந்தோ அவர் பின் வாங்கல.

இப்போது நம்முடைய ஆளுநர் அவர்கள் சனாதன தர்மம் குறித்தும், நம்முடைய இந்தியா தேசிய அரசியல் குறித்தும் அவர் பல்வேறு கருத்துகளை பொது விழாக்களில் பேசி வருகிறார். ஆகவே இருவருடைய சந்திப்பும் ஒரு நல்ல சந்திப்பு. இதுக்கு ஒன்னும் அரசியல் சாயம் பூச வேண்டியதில்ல. ஆன்மீகமும்,  தேசியமும் வளர்ந்து வர வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம்.

இதுக்கு வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியோ, இதுக்கு ஒரு அரசியல்  காரணங்களை கற்பிதம் செய்யவோ வேண்டாம். ரஜினி வந்து இயல்பாகவே ஆன்மீக அரசியலை ஆதரிக்க கூடியவர். தேசிய அரசியலை ஆதரிக்க கூடியவர். இந்த பிரிவினை வாதம், பயங்கரவாதம், வன்முறை இதெல்லாம் எதிர்க்கக் கூடியவர். அவர் ஸ்டெர்லைட் கலவரம் வந்த போதே இந்த தீய சக்திகள் எல்லாருக்கும் தெரியும் அப்படின்னு சொல்லி அவர் அடையாளப்படுத்தினார்.

ஆகவே இது வந்து ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லி இருக்காரு. அரசியலும் பேசி இருப்பாங்க. ஏன் அரசியல்ல ஈடுபடாதவங்க, அரசியலை பற்றி பேச கூடாதா ? பேசுவது நல்லது தானே. அதனால நான் இன்னும் கூட ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். தேசிய அரசியலுக்கு, ஆன்மீக அரசியலுக்கு, அவர் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை இந்த நேரத்திலே வைத்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |