நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ரஜினி தற்போது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். மேலும் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான வேலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, அடுத்த திரைப்படத்தின் இயக்குனரை தேர்வு செய்வதற்கு முன்பாக வடிவேலுவுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து நடிப்பதற்கு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், அடுத்த திரைப்படத்தில் இருவரும் ஒன்றிணைந்து நடித்தால் அந்த படம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.