மலையாள படத்தில் நடித்துள்ள மஞ்சுவாரியர் நடிப்பை ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியுள்ளார்
தர்பார் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ்சிவன் கிடைக்கும் இடைவேளையில் ஏற்கனவே இயக்கி வந்த மலையாள திரைப்படமான ஜாக் அண்ட் ஜில் வேலைகளையும் கவனித்து வந்தார்.
அத்திரைப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். தர்பார் படப்பிடிப்பின்போது மஞ்சுவாரியர் நடித்த சில காட்சிகளை ரஜினிக்கு போட்டுக் காட்டியுள்ளார் சந்தோஷ்சிவன்.
அதில் பரதநாட்டியம் தொடர்பான காட்சிகளில் மஞ்சு வாரியரின் நடிப்பை கண்டு ரஜினி அவர்கள் பிரம்மித்துப் போய் சந்தோஷ் சிவனிடம் மஞ்சுவாரியரை பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சந்தோஷ்சிவன் ரஜினி அவர்கள் மஞ்சு வாரியாரை பாராட்டியது குறித்து தெரிவித்துள்ளார்.