Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி – அஜித் சந்திப்பு உண்மை தானா….? வெளியான புதிய தகவல்….!!!

ரஜினி – அஜீத் சந்திப்பு புகைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். சமீபத்தில் அஜித்குமார் மற்றும் மங்காத்தா தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி குடும்பங்கள் சந்தித்துக் கொண்டனர்.

அஜித் - ரஜினி

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் சந்திப்பு மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்ததாக இருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது ரஜினி மற்றும் அஜித் சந்தித்தது போல இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.

இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த சந்திப்பு உண்மை அல்ல எனவும், இது ஒரு கற்பனை புகைப்படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |