2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அரசியல் வட்டாரங்களில் அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கு எதிராக போட்டியிடப் போகும் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் கமலஹாசன்,
மாற்றம் வரணும், மற்றும் சிஸ்டம் சரி இல்ல, எல்லாரும் திருட்டு பசங்க என கீபோர்டில் கதகளி ஆடும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டையே இல்லை என கமலஹாசன் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தான் இதற்கு முன்பாக மாற்றம் வரணும், சிஸ்டம் சரியில்லை என்பது உள்ளிட்ட கருத்துக்களை மக்கள் முன் வைத்தார் என்பதால், ரஜினியை தான் கமல் மறைமுகமாய் தாக்கிப் பேசியுள்ளார் என சமூக வலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.