ராஜஸ்தான் மாநிலத்தில் பல சந்தைக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தில் சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பழசந்தைக்குள் திடீரென இரு சக்கர வாகனத்தில் கையில் துப்பாக்கியுடன் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனால் அலறியடித்து ஓடிய அப்பகுதி மக்கள் அங்குமிங்குமாக சென்று ஒளிந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களிடம் யாருக்காவது அவர்களுக்கு அடையாளம் தெரிந்து உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.