Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் தலைமை அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக எப்ஐஆர்: ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

ட்விட்டர் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் டோர்சி பணியாற்றி வருகிறார். 44 வயதான இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது பல்வேறு புகைப்படங்களை எடுத்ததோடு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களில் ஒரு பெண் “பார்ப்பன நாட்டுப்பற்றை நசுக்குவோம்” என்று எழுதிய பதாகையை வைத்திருப்பது போல் உள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், இது பிராமணர்களுக்கு எதிரான கருது எனக் கூறி ஜாக் டோர்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, விப்ரா அமைப்பின் இளைஞரணியை சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவர் 2018 நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

நிர்வாக அதிகாரியின் கருத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தது. ஆனால், அதனை ஏற்க மனுதாரர் மறுத்துள்ளார். பல மாதங்களாக நடந்த இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜாக் டோர்சி மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |