Categories
மாநில செய்திகள்

தஞ்சாவூர், நாமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நாமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் என தகவல் அளித்துள்ளது.

மேலும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தற்போதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |