Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கிருஷ்ணகிரி , தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருச்சி, தேனி, நீலக்கிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |