Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரெய்னா… குடும்பத்தின் வேதனையுடன் ட்விட்டர் பதிவு…!

 

இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது குடும்பத்திற்கு நடந்த கொடூர செயலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். தற்போது அவர் தனது துயரத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் “பஞ்சாபில் என் குடும்பத்திற்கு நடந்தது கொடூரத்தையும் விட பயங்கரமானது. எனது மாமா படுகொலை செய்யப்பட்டார். அத்தை மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பல நாட்களாக உயிருக்கு போராடி வந்த எனது உறவினரும் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது எனது அத்தை செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். இதை யார் செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதுதொடர்பாக பஞ்சாப் காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இந்த கொடூரமான செயலை செய்தவர் யார் என்பதை நாங்கள் அறிய வேண்டும். மேலும் அவர் இது போன்ற குற்றங்களை செய்ய விடக்கூடாது” என சுரேஷ் ரெய்னா துயரத்துடன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |