தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் நாளை மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாக உள்ள புயலால் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும்.
அரபிக்கடலில் அவ்வப்போது மணக்கு 65 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும். எனவே ஜூன் 4ம் தேதி வரை லட்சத்தீவு, கேரள கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.