தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) கனமழை பெய்ய உள்ளதால் கடற்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், 12 தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.