தமிழகத்தில் நிவர், புரேவி உள்ளிட்ட புயலைத் தொடர்ந்து தற்போது அறுவடை நாளாக கருதப்படும் பொங்கல் தினமான இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புரேவி, நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள். நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் தவித்து வருவதால் பொங்கல்விழா கலையிழந்து காணப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பேய் மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகளும் சோகத்தில் உள்ளனர். அதேபோல் கனமழை காரணமாக கரும்பு, கிழங்கு உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.