நேற்றைய தினம் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சாலையோரங்களில் மழைநீர் வெள்ள பெருக்காக ஓடியும், பல இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என மாநில பேரிடர் மீட்பு படை எச்சரித்துள்ளது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு மருந்து வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதிப்பு பற்றி 9445086060 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.