தமிழகத்தில் 11 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும்,
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர், மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.