Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க போகாதீங்க….. 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, கடலூர், தஞ்சை, நாகை, மதுரை, திருவாரூர், சிவகங்கை, தென்காசி, ராம்நாடு, விருதுநகர் உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மன்னார்வளைகுடா, மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |