மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அங்கு வசித்து வந்த சுமார் 3.76 லட்சம் நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இதனையடுத்து 24,000 மேலான வீடுகள் வெள்ளத்தில் இடிந்து விழுந்ததோடு மட்டுமின்றி சுமார் 9,72,100 ஹெக்டர் நிலங்களிலுள்ள பயிர்கள் நாசமாகியுள்ளது. இதற்கிடையே இந்த பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பால் ரூபாய் 77,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.