Categories
தேசிய செய்திகள்

இதல்லவா மனிதநேயம்…. கொட்டும் மழையில் பெண் செய்த செயல்! குவியும் பாராட்டு…!!

கொட்டும் மழையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நேரிடும்போது கட்டாயம் அந்த இடத்தில் மனிதநேயம் என்பது வெளிப்பட்டே தீரும். யாராவது ஒரு நபர் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல்  சக மனிதனுக்கு பேரிடர் நேரிடும்போது முற்படுவர். அந்த வகையில், மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சிரமத்திற்கு நடுவிலும், பெண் ஒருவர் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் யாரென்றே தெரியாத சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தெற்கு மும்பையில் பெய்த கனமழையால் அங்குள்ள திறந்தவெளி பாதாள சாக்கடை ஒன்று மறைந்தது. இதில்,  வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து நேராமல் இருக்க பெண் ஒருவர் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே எச்சரிக்கை செய்யும் வீடியோ வைரல் ஆக அந்த பெண்ணிற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |