தண்டவாளத்தை சைக்கிளில் கடந்த போது ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியமங்கலம் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஜல்லிக் கற்களை “பேக்கிங்” செய்யும் ரயில் விக்னேஷ் மீது மோதியது.
இந்த விபத்தில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.