Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… டெய்லருக்கு நேர்ந்த விபரீதம்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்கும் முயற்சித்த டெய்லர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள உல்லி கிராமத்தில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று கஜேந்திரன் குடியாத்தம் பகுதியில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள வளத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பாதை வழியாக வந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக கஜேந்திரன் மீது வேகமாக மோதியது.

இதில் அவர் மோசமாக தூக்கி வீசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கஜேந்திரனின் உடலை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |