தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 14-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
இந்நிலையில் 14ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் இந்த வருகை முக்கியமானதாக கருதப்படுகிறது.