இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கை.

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை கேட்கும் பொது மிகவும் வேதனையாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.