Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது… மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

கொரோனா நிதியுதவி அளித்த மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் விவசாயிகள், தினக்கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு உதவும் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு. மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும். விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும். தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |