விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வேளாண் சட்ட மசோதாவை ஆதரிக்க கூடாது என கூறி சில நாட்களாக தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை. அவர்களின் குரல் பாராளுமன்றத்திலும், வெளியிலும் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இறந்து விட்டது என்பதற்கான சான்று இங்கே’ என இந்தியா முழுவதும் விவசாய வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.