ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ருத்ரன்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’ . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . இந்த படத்தை இயக்குவது யார் ?என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. சமீபத்தில் இந்த படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது .
Happy to welcome the one and only @realsarathkumar sir onboard for #Rudhran #ருத்ரன் @offl_Lawrence @5starkathir @priya_Bshankar @RDRajasekar @gvprakash @5starcreationss @venkatjashu @prosathish pic.twitter.com/796RRNHEkv
— Five Star Creations LLP (@5starcreationss) February 5, 2021
மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . ஏற்கனவே ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .