Categories
தேசிய செய்திகள்

ரபேல் ஊழல் வழக்கு….. ”மோடிக்கு வந்த அவப்பெயர்”…… இன்று அதிரடி தீர்ப்பு

ரபேல் போர் விமான ஊழல் சீராய்வு மனு வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்குகின்றது.

உலகில் எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? நீங்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியுடைய  தாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடந்த நிகழ்வில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது இருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் மீதான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போது மன்மோகன் சிங்கை பார்த்து பி.எம் ஷோர்ஹே சோஹே என குரல் எழுப்பினர் பாஜக உறுப்பினர்கள்.

Image result for manmohan singh

அமைதியான பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆக்ரோஷமான முகத்தை தேசம் அன்றைக்கு பார்த்தது. அன்றைக்கு மன்மோகன் சிங்கை பார்த்து பாஜக உறுப்பினர்கள் எழுப்பிய முழக்கம்  பூமரங் மாதிரி தற்போது பிரதமர் மோடியை நோக்கி திரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்தார்.உடனே சமூக வலைதளங்கள் பின்னால் சேர்ந்து கொண்டது. ஃபேஸ்புக்கிலும் , ட்விட்டரிலும் மேரா பி.எம் ஷோர்ஹே சோஹே என மக்கள் பேச தொடங்கினார்கள்.

Image result for Modi rafale

சமீபத்தில் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கும் ரபேல் விவகாரத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டு கொண்டிருக்கிறார். மேலும் புகழ்பெற்ற போபேர்ஸ் ஊழலோடு , ரபேல் விவகாரம் ஒப்பிடப்படுகிறது. இந்திய வரலாற்றில் போபர்ஸ் ஊழல் ஒரு முக்கியமான பங்கு உண்டு. 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் பெறாத வெற்றியை பெற்று பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி ஆனால் அவரது கட்சி ஆட்சிக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்தது அவரது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தியின் ஆட்சி பறிபோனது.

அதே போல பாஜக மோடி அரசின் மீது ரபேல் ஊழல் பெரும் பின்னடைவை பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. ரபேல் ஊழல் தொடர்பான அனைத்து வழக்கையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று அதன் சீராய்வு மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கபட இருக்கின்றது. தேசியளவில் பெரும் எதிர்பார்ப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |