சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய சுகாதாரத்துறை செயலாளரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு 1500யை தாண்டி தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜெ. ராதாகிருஷ்ணனை தற்போது தமிழக புதிய சுகாதாரத் துறைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வணிகவரித் துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.