Categories
Uncategorized

இந்த ராசிக்காரர்… “வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது”..! இன்றைய ராசி பலன் அறிய….

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று  தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள்  வியக்கக்கூடும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். இன்று  குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் . பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது ரொம்ப நல்லது. இன்று  விருந்தினர் வருகை இருக்கும்.

பணவரவை அதிகப்படுத்துவதற்கான சூழலில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் கொடுக்கும். எதிர்ப்பும், இடையூறும்  ஒருபுறம் இருந்தாலும் உங்களின் தன்னம்பிக்கையாலும்  தைரியத்தாலும்  அவற்றை போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள். இன்றைய நாள் அனைத்து விஷியத்திலும் சிறப்பைகொடுப்பதாக இருக்கும. இன்று மாணவ செல்வங்கள்  கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்க  கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள்

 

ரிஷபம் 

ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பண தேவைகள் பால்ய நன்பர்கள் பூர்த்தி செய்வார்கள். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விலகி போன  வரன் மீண்டும் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்  பண கஷடம் குறையும்.  பக்குவமா சில விஷியங்களை எடுத்துச் சொல்லி எதிரில் இருப்பவரை திருப்தி அடைய செய்வீர்கள்.  பல வழிகளிலும் இன்றைக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.

ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது மட்டும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது  ரொம்ப  நல்லது. அலுவலகம் தொடர்பான  பணிகள் கொஞ்சம் தாமதம் பட்டு நடக்கும். இன்று  மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், ஆசிரியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று சக மாணவர்கள் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எந்தவித பிரச்சினைகளும் வேண்டாம் விளையாட்டுத் துறையிலும் இன்று ஆர்வம் செல்லும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க  கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்

அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர்பச்சை

 

மிதுனம் 

மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும் . தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு  ஆச்சரியப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தனமான  போக்கு காணப்பட்டாலும்,தேவையான பண வரவு இருக்கும்.

புதிய முயற்சிகளில் தாமதமான  நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப  நல்லது. மற்றவரிடம் கொஞ்சம் சாதரணமாக  பேசுங்கள். உங்களுடைய வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் இன்று விலகிச் செல்லும்.

இன்று  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க  கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  அது உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை

 

 

கடகம் 

கடக ராசி அன்பர்களே…!!!! இன்று சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது விழிப்புணர்ச்சி தேவை. பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படுவதால், பிரச்னைகள் அகலும். பயணங்களில் கவனம் இருக்கட்டும். இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகளும் கொஞ்சம்  ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப்போக்கு ஏற்படாமல் , தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் கொடுப்பதாக இருக்கும். செலவு கொஞ்சம் கூடும. உங்களுடைய வாக்கு வன்மையால் காரிய அனுகூலமும்  நல்லபடியாகவே நடக்கும். இன்று  எதை தொட்டாலும் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, திருமண முயற்சி சிறப்பாக நடக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில்  இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.  அணைத்து காரியமும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெளிர்நீலம்

 

சிம்மம் 

சிம்மம் ராசி அன்பர்களே…!!! இன்று வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இறக்கும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று  பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும்.

ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது சிறப்பு. நண்பர்கள் உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று பணம் உதவி வந்து சேரும். எதிலும் கவனம் இருக்கட்டும். இன்று கூடுமானவரை மற்றவரிடம் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு எப்பொழுதுமே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.  அனைத்து  காரியங்களும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

 

கன்னி 

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும் . உத்யோக வாய்ப்பு வாய்ப்பு கைகூடும். இடம் பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பணியாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். இன்று  உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடிர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம்  ஏற்படும். வீண் செலவுகள் கெளரவம் குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனமாகவே இருங்கள்.

தாய், தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது எப்போதுமே சிறப்பு.  வீண் வாக்கு வாதங்களை தயவு செய்து இன்று  தவிர்த்து விடுங்கள். எதிர்பாராத செலவு இருக்கும். உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். மற்றவர்கள் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இந்த விஷியத்தில்  கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.அனைத்து காரியமும் ரொம்ப நல்ல படியாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை

 

 

துலாம் 

துலாம் ராசி அன்பர்கள்,

இன்று வரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும்.

கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நல்ல முடிவை தரும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். தொலைபேசி தொடர்பாக சில புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்தக் குறையுமே இல்லை. சுபநிகழ்ச்சிகள் இன்று இடம்பெறும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிகப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட திசை:தெற்கு

 அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

 

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்கள்,

இன்று  தாராளமாக செலவிட்டு மகிழும் நாளாக இருக்கும். பணிகள் துரிதமாக நடைபெறும், உத்தியோகத்தில் உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று எதிர்ப்புகள் நீங்கும், நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றி தர உதவும்.

பொருளாதாரத்தில் பிரச்சினை எதுவுமில்லை, இருந்தாலும் மருத்துவச் செலவு வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் விரயச் செலவுகளை தயவுசெய்து தடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். கடந்த காலத்தில் உங்களை விட்டு சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களில் உன்னதமான நிகழ்வுகள் நடக்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

தனுசு 

தனுசு ராசி அன்பர்கள்,

இன்று தைரியத்தோடு செயல்படும் நாளாக இருக்கும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதரர்கள் ஒத்துழைப்பால் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அரசு வழி அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் ஏற்படும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக முடிப்பீர்கள்.

வாகனத்தில் செல்லும்போது ரொம்ப கவனமாக நீங்கள் செல்ல வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் தடைபடும், ஆனால் சரியான தீர்வு அதற்கு கிடைப்பதற்கான வழிகள் இன்று பிறக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான நிலையில்  இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

 

மகரம் 

மகர ராசி அன்பர்கள்,

இன்று திடீர் திருப்பங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். அன்பு நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். உடல்நிலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இன்று திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக ஈடுபடுவீர்கள், வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் ரொம்ப எச்சரிக்கை வேண்டும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரிய பேச்சால் எதிலும் லாபம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும், எந்த ஒரு வேலையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் இன்று அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்

 

கும்பம் 

கும்பம் ராசி அன்பர்களே,

இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவரின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். தொழில் மாற்றும் சிந்தனை உருவாகும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும் பிரச்சனைகளில் சுமூகமான முடிவு ஏற்படும். தைரியம் கூடும், திறமையை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.

வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமையின் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். அவசரத்தை மட்டும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. கடமைகளை காப்பாற்றுவீர்கள், அதனால் சில சமயம் விரக்தி கூட ஏற்படலாம். தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

 

மீனம் 

மீனம் ராசி அன்பர்கள்,

இன்று பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாளாக இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்துகொள்வார்கள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உதவி புரியும். எதிர்பார்த்ததை விட லாபம் இருமடங்காக இருக்கும். இன்று வர்த்தகத் திறமை அதிகரிக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த வேலைகளை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டியில் சாதகமான பலனை கொடுக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவு காணப்படும். இன்று அனைத்து விஷயங்களையும் நீங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் காவி நிறம்

Categories

Tech |