Categories
உலக செய்திகள்

முதல் கட்ட பகுதி தேர்வு…. அடுத்தாண்டு ஏவப்படும் ராஷித் ரோவர்…. வெளியான முக்கிய தகவல்….!!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமீரகம் சார்பாக உருவாக்கப்படும் ராஷீத் ரோவர் அடுத்தாண்டு அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷித் ரோவர் என்னும் நிலவை சென்று ஆராய்ச்சி செய்யும் விமானம் அமீரகம் சார்பாக முகமது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ராஷித் ரோவர் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முகமது பின் ராஷித் விண்வெளி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் எவவுள்ள இந்த ராஷித் ரோவர் 3 மாதங்கள் விண்ணில் பயணம் செய்து அதன் பின்பாக நிலவை அடையும் என்றும் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி விண்ணில் ஏவப்பட்ட பின்பாக நிலவில் தரையிறங்கும் ரோவரின் முதல் கட்ட பகுதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |