இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க முடியாத பாஜக அரசு 8,400 கோடி ரூபாய் செலவில் பிரதமருக்கு அதிநவீன விமானம் வாங்குவது நியாயமா என காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவ வீரர்கள் சாதாரண வாகனங்களில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இராணுவ உயரதிகாரிகள் குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்வதாகவும் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணிபுரியும் தங்களுக்கு அந்த வசதி அளிக்கப்படவில்லை என்றும் வீரர்கள் உரையாடி இருந்தனர்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்வதால் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க படுவதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு 8,400 கோடி ரூபாய் செலவில் அதிநவீன விமானம் வாங்கும் பாஜக அரசு ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாதது ஏன் என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.