ராணுவ தினம் ஜனவரி 15 கொண்டாடுவதன் காரணத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதியன்று ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் ராணுவ வீரர்களை போற்றும் வகையில் பல்வேறு விருதுகள் பாராட்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். இந்த ராணுவ தினம் உருவான வரலாறு குறித்து காண்போம்: ஜனவரி 15, 1949 அன்று இந்திய ராணுவத்தின் கட்டளை உரிமம் ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடம் இருந்து ஜெனரல் KM காரியப்பாவிடம் ஒப்படைக்க பட்டது.
பிரிட்டிஷ் கையில் இருந்த அதிகாரங்கள் சுதந்திர இந்தியாவின் கைகளுக்கு மாற்றப்பட்ட நாளையே இன்று ராணுவ தினமாக கொண்டாடுகிறோம். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.