ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டப்பட்ட கட்டட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களை கட்ட 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 118 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய கட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய பாலங்களையும் திறந்து வைக்கிறார்.