தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் ஏசி அறையில் சொகுசாக தூங்குவதாக நினைக்கின்றனர். ஆனால் ஏசி அறையில் தூங்குவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்காக இந்த பதிவு.
ஏசி அறையில் அல்லது இயற்கை காற்று வராத அறையில் தூங்குவதனால் மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறு, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இயற்கை காற்று வரமுடியாத அறையில் மூன்றரை மணி நேரம்தான் ஆக்சிஜன் இருக்கும்.
இதனால் அந்த அறையில் தூங்குபவர்களின் நுரையீரல் பிராண வாயுவை சரியாக அளவிட முடியாது. இந்த சூழலில் சிறுநீரகம் செய்து கொண்டிருக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை நிறுத்திவிட்டு, நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை அது உடலுக்கு கொடுக்கும்.
நமது உடலில் இருக்கும் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்ததும் அது கழிவு நீராக வெளியேற சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இதன் பிறகு உடலுக்கு ஆக்சிஜன் நிறைந்த புதிய தண்ணீர் தேவைப்படுவதால் அதிக அளவு தாகம் எடுக்கும்.
இதனால் சிறுநீரகத்தின் வேலை அதிகரித்து அழுக்குகள் தேங்குகிறது. அதுமட்டுமன்றி யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரிக்கிறது. இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதே மூட்டு வலி, சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கான காரணம். எனவே இயற்கை காற்று வரும் அறையை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமாக உறங்குவது நல்லது.