Categories
தேசிய செய்திகள்

பிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு….. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளும் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஃபிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்ந்து வருகிறது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் சீனியர் சிட்டிசனுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வங்கியும் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது axis bank-ம் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து 7 முதல் 29 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 2.75 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகவும், 30 நாள் முதல் 60 நாள் வரை உள்ள பிக்சட் டெபாசிட்டுகளுக்கு ‌3.25 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாகவும், 61 நாள் முதல் 3 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 4 சதவீதமும், 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 4.25 சதவீதமும், 15 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீதமும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 2 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் முதல் 6.90 சதவீதமும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |