Categories
உலக செய்திகள்

என்ன தான் சாதிக்கப்போறிங்க கிம் ஜான் உன்….? எதுக்கு இத்தனை ஏவுகணை பரிசோதனை….?

பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தாக்கங்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை செய்து கிம் ஜான் உன் என்ன சாதிக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடகொரியா, கடந்த 2017ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிதான ஏவுகணை பரிசோதனையை நேற்று செய்திருக்கிறது. வடகொரியா தற்போது பரிசோதனை செய்த ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக்கூடியது. சுமார் 2,000 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்து ஜப்பான் கடலில் விழுந்து விட்டது.

வடகொரியா இதோடு இந்த மாதத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை பரிசோதனை செய்திருக்கிறது. ஐ.நா சபை தடை விதித்தும், உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்துவதே இல்லை. இந்நிலையில் இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி இவ்வாறு ஏவுகணை பரிசோதனை செய்து என்ன தான் சாதிக்கப் போகிறார் கிம் ஜாங் உன் என்ற கேள்விகள் எழுகிறது.

மேலும் அந்நாடு, ஏற்கனவே நிதி நெருக்கடி மற்றும் கொரோனா பாதிப்புகளால் அதிக நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் கிம் ஜாங் உன், தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை நடத்திக் கொண்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

Categories

Tech |