கொரோனா பாதிப்பு உள்ள இந்த சமயத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போதுதான் ஒரு சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியதுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அட்மிஷன் ஓபன் செய்யப்பட்டு செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று ஒருபுறம் தகவல் வெளியாக, வருகின்ற கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் என்பவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவசர அவசரமாக புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதே ஏழை மக்களின் கல்வி உரிமையைப் அழிப்பதற்கு சமம் ஆகும். எனவே மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.